வெள்ளி, 28 மே, 2010
அனுபவம்-2
என்னுடைய பிறந்த தேதி :24.3.1967. மாலை :2.55pm
பரிசு விழுந்த நாள் 22.8.2001.
இதில் உள்ள சோதிட உண்மைகளை ஆராயும் முன் .
என் ஜாதகத்தில் உள்ள சில அடிப்படை அம்சங்களை பார்த்து விடுவோம் .
கடக லக்கினம் . சிம்ம ராசி .
லக்கினத்தில் குரு உச்சம் , இரண்டில் சந்திரன் , நான்கில் செவ்வாய் +கேது , எட்டில் புதன் , ஒன்பதில் சூரியன் +சனி , பத்தில் ராகு +சுக்கிரன் , இது நான் பிறக்கும் போது கோள்களின் நிலை .
ஒன்றாம் வீடு -குணநலன் ,பண்பு ,ஆயுள் நிலை ,நடத்தை ,தோற்றம் முதலியவற்றை நிர்ணயிக்கிறது .எனக்கு கடக லக்கினம் -அதன் அதிபதி சந்திரன் . இவர் இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ளார் .
இரண்டாம் வீடு , வாக்கு , தனம் (செல்வத்தின் அளவு ), குடும்பம் (மனைவி அமையும் பாக்கியம் ), குறித்து காட்டும் . இதன் அதிபதி யாக சூரியன் .இவர் ஒன்பதாம் வீடாகிய பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் .
மூன்றாம் வீடு -தைரியம் ,உடன்பிறப்பு ,வீரியம் நிலையைக்காட்டும் .எனக்கு புதன் .அந்த பணியை செய்வதாக ஏற்று ,எட்டாம் வீட்டில் மறைந்து ,எனக்கு பின் சகோதரம் இல்லாத நிலையை உணர்த்துகிறார் .கூடவே தைரியமும் ,வீரமும் ஸ்வாஹா .தைரியமும் ,வீரமும் புத்தியில்தான் .
நான்காம் வீடு -தாயின் நிலை ,வண்டிவாகன சுகம் ,நிலா புலன் ,வித்யா பலம் ,குடும்பமேன்மை ,காட்டும் .சுக்கிரன் அந்த பொறுப்பினை ஏற்று ,பத்தாம் வீடாகிய மேஷத்தில் ராகுவுடன் கூட்டணி ஆட்சி நடாத்துகிறார் .
ஐந்தாம் வீடு -புத்திர பாக்கியம் ,அறிவு விசாலம் அதன் விரிவினை பேசும் .மேலும் பூர்வபுண்ணிய வைப்பு நிலைமையை காட்டும் .வாங்கி வந்தது வரமா?, சாபமா?, அறியலாம் .என்னப்பன் முருகன் அதி தேவதையாக கொண்டு செவ்வாய் அதிபதியாக
தலைமையேற்று நான்காம் வீட்டில் ஞானகாரகன் கேதுவுடன் அமர்ந்துள்ளார் .
ஆறாம் வீடு -கடன் ,வியாதி ,எதிரி குறித்து அறிவிக்கும் . குரு பகவான் அந்த பொறுப்பினை ஏற்று , இந்த மூவகையான துன்பத்தாலும் புடம் போட்டு ,ஞானத்தை அருளினார்.இவர் லக்கினத்திலேயே அமர்ந்து எனை வழி நடத்து கிறார் .
ஏழாம் வீடு , எட்டாம் வீடு சனி அதிபதியாக வந்து ,ஒன்பதில் அமர்ந்து பாக்கிய
ஸ்தானத்தை பங்கிட்டு அளிக்கிறார் .
ஒன்பதாம் வீடு -பாக்கிய ஸ்தானம் எனப்படும் -பெற்ற பலனை அனுபவிக்கும் வாய்ப்பு , என் முன்னோர்கள் பாவத்தை சேர்த்து வைத்தார்களா அல்லது புண்ணியத்தை சேர்த்து வைத்தார்களா ? நிலைக்குமா? சொல்லும் இடம் . குரு பகவான் அதிபதியாய் ஆகி ,லக்கினத்திலேயே உச்சம் பெற்று , சுபபலமுடன் ஆளுகிறார்.
பத்தாம் வீடு- தொழில், கர்ம ஸ்தானம்,இதன் அதிபதி -செவ்வாய், இவர் நான்கில் அமர்ந்து பத்தாம் வீட்டை பார்க்கிறார்.
பதினோராம் வீட்டுக்கு அதிபதி-சுக்கிரன் பத்தில் அமர்ந்து, நான்காம் வீட்டை பார்க்கிறார்.
பனிரெண்டாம் வீட்டு அதிபதி- புதன், எட்டில் மறைந்து விந்துவிட்டார்.
இது என் ஜாதக அமைப்பு. இனி எனக்கு பரிசு விழுந்த போது இருந்த கிரக நிலைகளும், எப்படி ஜோதிட விதிகளோடு நூறு சத வீதம் பொருந்திப்போனது என்பதை விளக்குகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக