வெள்ளி, 28 மே, 2010

அனுபவம்-2


என்னுடைய பிறந்த தேதி :24.3.1967. மாலை :2.55pm
பரிசு விழுந்த நாள் 22.8.2001.
இதில் உள்ள சோதிட உண்மைகளை ஆராயும் முன் .
என் ஜாதகத்தில் உள்ள சில அடிப்படை அம்சங்களை பார்த்து விடுவோம் .
கடக லக்கினம் . சிம்ம ராசி .
லக்கினத்தில் குரு உச்சம் , இரண்டில் சந்திரன் , நான்கில் செவ்வாய் +கேது , எட்டில் புதன் , ஒன்பதில் சூரியன் +சனி , பத்தில் ராகு +சுக்கிரன் , இது நான் பிறக்கும் போது கோள்களின் நிலை .
ஒன்றாம் வீடு -குணநலன் ,பண்பு ,ஆயுள் நிலை ,நடத்தை ,தோற்றம் முதலியவற்றை நிர்ணயிக்கிறது .எனக்கு கடக லக்கினம் -அதன் அதிபதி சந்திரன் . இவர் இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ளார் .
இரண்டாம் வீடு , வாக்கு , தனம் (செல்வத்தின் அளவு ), குடும்பம் (மனைவி அமையும் பாக்கியம் ), குறித்து காட்டும் . இதன் அதிபதி யாக சூரியன் .இவர் ஒன்பதாம் வீடாகிய பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் .
மூன்றாம் வீடு -தைரியம் ,உடன்பிறப்பு ,வீரியம் நிலையைக்காட்டும் .எனக்கு புதன் .அந்த பணியை செய்வதாக ஏற்று ,எட்டாம் வீட்டில் மறைந்து ,எனக்கு பின் சகோதரம் இல்லாத நிலையை உணர்த்துகிறார் .கூடவே தைரியமும் ,வீரமும் ஸ்வாஹா .தைரியமும் ,வீரமும் புத்தியில்தான் .
நான்காம் வீடு -தாயின் நிலை ,வண்டிவாகன சுகம் ,நிலா புலன் ,வித்யா பலம் ,குடும்பமேன்மை ,காட்டும் .சுக்கிரன் அந்த பொறுப்பினை ஏற்று ,பத்தாம் வீடாகிய மேஷத்தில் ராகுவுடன் கூட்டணி ஆட்சி நடாத்துகிறார் .
ஐந்தாம் வீடு -புத்திர பாக்கியம் ,அறிவு விசாலம் அதன் விரிவினை பேசும் .மேலும் பூர்வபுண்ணிய வைப்பு நிலைமையை காட்டும் .வாங்கி வந்தது வரமா?, சாபமா?, அறியலாம் .என்னப்பன் முருகன் அதி தேவதையாக கொண்டு செவ்வாய் அதிபதியாக
தலைமையேற்று நான்காம் வீட்டில் ஞானகாரகன் கேதுவுடன் அமர்ந்துள்ளார் .
ஆறாம் வீடு -கடன் ,வியாதி ,எதிரி குறித்து அறிவிக்கும் . குரு பகவான் அந்த பொறுப்பினை ஏற்று , இந்த மூவகையான துன்பத்தாலும் புடம் போட்டு ,ஞானத்தை அருளினார்.இவர் லக்கினத்திலேயே அமர்ந்து எனை வழி நடத்து கிறார் .
ஏழாம் வீடு , எட்டாம் வீடு சனி அதிபதியாக வந்து ,ஒன்பதில் அமர்ந்து பாக்கிய
ஸ்தானத்தை பங்கிட்டு அளிக்கிறார் .

ஒன்பதாம் வீடு -பாக்கிய ஸ்தானம் எனப்படும் -பெற்ற பலனை அனுபவிக்கும் வாய்ப்பு , என் முன்னோர்கள் பாவத்தை சேர்த்து வைத்தார்களா அல்லது புண்ணியத்தை சேர்த்து வைத்தார்களா ? நிலைக்குமா? சொல்லும் இடம் . குரு பகவான் அதிபதியாய் ஆகி ,லக்கினத்திலேயே உச்சம் பெற்று , சுபபலமுடன் ஆளுகிறார்.
பத்தாம் வீடு- தொழில், கர்ம ஸ்தானம்,இதன் அதிபதி -செவ்வாய்,  இவர் நான்கில் அமர்ந்து பத்தாம் வீட்டை பார்க்கிறார்.
பதினோராம் வீட்டுக்கு அதிபதி-சுக்கிரன் பத்தில் அமர்ந்து, நான்காம் வீட்டை பார்க்கிறார்.
பனிரெண்டாம் வீட்டு அதிபதி- புதன், எட்டில் மறைந்து விந்துவிட்டார்.
இது என் ஜாதக அமைப்பு. இனி எனக்கு பரிசு விழுந்த போது இருந்த கிரக நிலைகளும், எப்படி ஜோதிட விதிகளோடு நூறு சத வீதம் பொருந்திப்போனது என்பதை விளக்குகிறேன்.

வியாழன், 27 மே, 2010

அனுபவம்-1

2001-ம வருடம்,
காலை நேரம் கள்ளகுறிச்சி டவுனில் ஜெயலட்சுமி ஐயர்ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு எதிரில் உள்ள வேலாயுதம லாட்ரி கடையில்
பூடான் குலுக்கல் சீட்டு ஒன்றினை வாங்கினேன். நம்பரை பார்த்ததும்
ஏதாவது சிறு பரிசாவது விழும் என தோன்றியது.நம்பர்-34566.
மனம் முழுக்க கசப்பும் , பரிதவிப்புமான வாழ்க்கை .நைனார் பாளையம் கிராமத்தில் கிராமப்புரமருத்துவராக காலம் ஓடி கொண்டு இருந்தது .தினசரி
வருமானம் குடும்பம் நடத்த சரியாகஇருந்த்தது.இரண்டு லக்ஸ ரூபாய் கடன்
சுமை மனதை பாரமாய் அழுத்த,திகைத்து நின்றகாலம்.
மறுநாள் வழக்கம் போல் விடிந்தது . காலையில் என்னுடைய கிளினிக்கில் அமர்ந்து நோயாளிகளை பார்த்து கொண்டிருந்தேன் .மாலைவரை
தொழில் நாட்டத்தில் எனைமறந்து இருந்தேன் .இரவு சில மருந்துகள் வாங்க
ஆத்தூர் நகரம் சென்றேன் .முதல்நாள் லாட்டரி சீட்டு வாங்கியது நினைவுக்கு வர
அங்குள்ள லாட்டரிசீட்டு கடையை நாடி சென்றேன் .மறக்க கூடிய நம்பரா அது .
நன்றாகநினைவு இருந்தது .
யோகலட்சுமி மலை பதிப்பினை பார்த்தேன் .சிறுபரிசு ஏதாவது விழுந்து இருக்குமோ என தேடினேன் .மனம் ஏமாற்றத்தில் கரைந்துகொண்டு வந்தது .
ஏதுமில்லை .ஏமாறரத்தில் பழகிய மனம் பேப்பரை மடிக்க முற்படுகையில்
அனிச்சையாக முதல பரிசு நம்பரை பார்த்தேன் .34566 .
உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு .ஒருகணம் நம்பமுடியவில்லை .காண்பது கனவா புரியவில்லை. சீட்டைவேறு கையேடு எடுத்து வரவில்லை விழிகளும், மனமும் நம்மை ஏமாற்றுகிறதா ? முதல் பரிசு நம்பரோடு நாம் வாங்கி இருக்கும் நம்பரும் மனமயக்கத்தால் ஒன்றுபோல் தோன்றுகிறதா ? பரிசு உனக்குத்தான் என உள்ளம் துள்ளியது .அடக்கிகொண்டேன் .பஸ் ஏறி நைனார் பாளையம் நோக்கி சென்றேன்
கடந்தகால கசப்பான வாழ்க்கை ,கடனால் பட்ட அவமானங்கள் ,கசந்துபோன உறவுகள் ,சொந்தவீடிலேயே அந்நியமாகிப்போன அவலங்கள் , வறுமையால் அறிந்துக்கொண்ட நிஜமுகங்கள் ,எல்லாம் வரிசையாக வந்து நினைவில் மோதியது .மனதையும் ,அறிவையும் , வாழ்வையும் ,கட்டியிருந்த விலங்கு நிமிடத்தில் அறுபட்டுப்போன நிம்மதி .
வீடுவந்ததும் நம்பரை சரிபார்த்து நிம்மதியானேன் .என்வாழ்வில் வெளிச்சம் பரவிய அந்த்கனங்களை அனுபவித்தேன் .இரவு பதினோருமணி லாட்டரியில்
முதல் பரிசு விழ்ந்ததை சொன்னேன் .ஐந்து லக்சரூபாய் பரிசுத்தொகை .
அத்தனை கஷ்டங்களு ம நொடியில் தீர்ந்து போன அதிசயத்தை அவளால்
ஜீரணிக்கமுடியவில்லை .அன்றைய இரவு மனம் சந்தோசத்தால் சிறிது கூட
தூங்க வில்லை .மறுநாள் வருமான வரி பிடித்தம் போக மூன்றே முக்கால் லக்ச ரூபாய் கையில் வந்தது .
நண்பர்களே இந்த பரிசு பணம் நான் வாங்கும் வரை . ஜோதிடம் குறித்த எந்த அறிவும் நாட்டமும் இல்லாமலிருந்தேன் .